விரைவில் புதுப்பேட்டை 2: செல்வராகவன்
ADDED : 1263 days ago
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் ‛காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்' போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். 2006ல் வெளியான புதுப்பேட்டை படமும், 2010ல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் இன்றளவும் பேசப்படுகிறது. இதன் 2ம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலம் இருந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவனிடம் கேட்டபோது, 'புதுப்பேட்டை 2' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன் 2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் உருவாக்கப்படும். அதில் முதலில் புதுப்பேட்டை 2 வரும் என்றார்.