கட்டில் திரைக்கதைக்கு விருது
ADDED : 1190 days ago
சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர் இ.வி.கணேஷ் பாபு. இவர் யமுனா என்ற படத்தை இயக்கினார். தற்போது இயக்கி உள்ள படம் கட்டில். இந்த படத்தில் அவரே நாயகனாக நடித்துள்ளார், நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். இந்த படம் எடிட்டர் லெனின் எழுதிய சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. பல தலைமுறைகளை கடந்து வரும் ஒரு கட்டில் பற்றிய கதை.
இந்த படத்தின் திரைக்கதையை கணேஷ்பாபு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்திற்கு, வாஷிங்டன் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிறந்த நூலுக்கான விருதை வழங்கியது. சென்னையில் நடந்த விழாவில் நீதிபதி கிருஷ்ணன், கணேஷ் பாபுவிடம் விருதை வழங்கினார்.