ஓணம் பண்டிகை: கேரளத்து பாரம்பரிய உடையில் போட்டோசூட் நடத்திய அமலாபால்!
ADDED : 1123 days ago
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை பிரிந்த பிறகு சில படங்களில் நடித்த அமலாபாலுக்கு எதிர்பார்த்தபடி பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. சோசியல் மீடியாவில் அதிரடியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு வரும் அமலா பால், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தயாரித்து நடித்த கடாவர் என்ற படம் வெளியானது. இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை என்பதால் கேரள பெண்கள் அணியும் பாரம்பரிய புடவையில் விதவிதமான போட்டோக்களை எடுத்து அவற்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் அமலா பால். வெள்ளை நிற உடையில் தேவதையாக அவர் தோன்றும் போட்டோக்களுக்கு சோசியல் மீடியாவில் லைக்குகள் குவிந்து வருகிறது.