கர்ப்பிணி வேடத்தில் ஆக்சன் ஹீரோயினாக சமந்தா! அதிரடியான யசோதா டீசர் வெளியானது!!
ADDED : 1123 days ago
தற்போது தெலுங்கில் யசோதா, சகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. இதில் ஹரிஷ் நாராயணன் மற்றும் ஹரிசங்கர் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யசோதா பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. கடந்த மாதமே திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் முடிவடைய தாமதமானதால் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது யசோதா படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ள சமந்தா கர்ப்பமாக இருக்கும் போது தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்றும் முயற்சியாக ஆக்ஷனில் இறங்கும் காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது. சமந்தாவின் இந்த அதிரடியான யசோதா டீசர் வெளியானதை அடுத்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.