உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷங்கர் படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா

ஷங்கர் படத்தில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா

ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி , அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து இருக்கிறார். நேற்று முதல் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். மாநாடு படத்திற்கு பிறகு தமிழில் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ். ஜே. சூர்யா, ஆர்.சி-15 படத்திலும் நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் ஒரு கேரக்டரில் எஸ். ஜே .சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !