14 வயதில் மகள் வெளியிட்ட புத்தகம் : நெகிழ்ச்சியில் வனிதா
ADDED : 838 days ago
நடிகை வனிதா விஜயகுமாரின் இரண்டாவது மகள் பெயர் ஜெயனிதா ராஜன். வனிதாவின் விவகாரத்துக்கு பின் தந்தையுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வனிதாவும் ஜெயனிதாவும் சந்தித்து தங்கள் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். தற்போது 14 வயதே ஆன ஜெயனிதா ராஜன் 'டே அண்ட் நைட்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வனிதா 'என்னோட அரிசிமூட்டை எழுத்தாளர் ஆகிட்டா' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். ஜெயனிதாவின் திறமையை பாராட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.