உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகன்களின் புகைப்படத்தை முதன்முதலில் வெளியிட்ட சின்மயி

மகன்களின் புகைப்படத்தை முதன்முதலில் வெளியிட்ட சின்மயி

நடிகர் ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார் பாடகி சின்மயி. இருவருக்கும் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியே தெரிவிக்காததால், நயன்தாராவை போல் சின்மயியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாரா என்ற சர்ச்சை பரவியது. அதையெல்லாம் சின்மயி தொடர்ந்து மறுத்து வந்தார். தனது மகன்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என பெயர் வைத்துள்ள சின்மயி, மகன்களின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் சோஷியல் மீடியாவில் வெளியிடாமல் இருந்தார். சமீபத்தில் சின்மயியின் குழந்தைகளை பார்க்க போட்டோக்களை வெளியிடும் படி ரசிகர்கள் கேட்க, முதன்முதலாக தனது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை சின்மயி தனது இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். க்யூட் குழந்தைகளான த்ரிப்தா, ஷர்வாஸுக்கு பலரும் தங்களது அன்பினை பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !