கன்னட நடிகரை இயக்கும் ஜெயம் ரவி பட இயக்குனர்
ADDED : 847 days ago
ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லக்ஷ்மன். இவர் ஜெயம் ரவியை வைத்து கடைசியாக இயக்கிய பூமி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால் லக்ஷ்மனுக்கு அடுத்த பட வாய்ப்பில் தாமதம் ஆனது. இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் நிகில் குமாரா சுவாமியை வைத்து கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாக உள்ள படத்தை லக்ஷ்மன் இயக்க போகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.