டைகர் - 3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ADDED : 986 days ago
பாலிவுட் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான். தற்போது 'டைகர் 3' படத்தில் நடித்து முடித்துள்ளார். முதல் இரண்டு பாகத்திலும் கதாநாயகியாக நடித்த கத்ரினா கைப் தான் டைகர் 3 பாகத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் மனிஷ் சர்மா இயக்கும் இந்த படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதுவும் யாஷ் ராஜ் ஸ்பை யுனிவர்சலில் இடம் பெறும் என்கிறார்கள். இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.