கிச்சா சுதீப்பின் புதிய தமிழ் பட தலைப்பு அறிவிப்பு!
ADDED : 762 days ago
கன்னட நடிகர் கிச்சா சுதீப் தமிழில் புலி, முடிஞ்சா இவனபுடி ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஆனால், இப்படங்கள் சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே எஸ். தானு தயாரிப்பில் கிச்சா சுதீப் தனது 46வது படத்தில் நடித்து வருவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று (செப்.,2) கிச்சா சுதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்திற்கு 'மேக்ஸ்' என தலைப்பு வைத்துள்ளதாக டைட்டில் டீசர் உடன் அறிவித்துள்ளனர். இயக்குனர் விஜய் கார்த்திகேயா இயக்கும் இப்படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது.