தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி நிற்கும் தமன்னா
ADDED : 735 days ago
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடியிருந்த காவாலா என்ற பாடல் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. தற்போது சுந்தர்.சி-யின் ‛அரண்மனை 4' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஹிந்தி, மலையாள படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தற்போது தான் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்துவதாகவும், தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு, தென்னிந்தியப் படங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் கமர்ஷியல் விஷயங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதில் என்னுடைய கதாபாத்திரங்களுடன் என்னால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதுபற்றி சில இயக்குநர்களிடம் சொல்லியும் கூட எந்த பயனும் இல்லை. இதனால் ஒரு கட்டத்தில் அதுபோன்ற படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன்'' என்கிறார்.