உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 53வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய குஷ்பு

53வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய குஷ்பு

1988ம் ஆண்டு ரஜினி - பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் குஷ்பு. அதையடுத்து ரஜினி, கமல் என்று அடுத்தடுத்து முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாக ஆகிவிட்டார். சமீபகாலமாக சினிமா, சின்னத்திரை, அரசியல் என்று செயல்பட்டு வரும் குஷ்பு, தன்னுடைய உடல் எடையையும் குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார். இப்படியான நிலையில், நேற்று அவர் தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவரது இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் சுந்தர். சி, குஷ்புவின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இது குறித்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !