நாகார்ஜூனாவின் 100வது படத்தை இயக்கும் மூடர் கூடம் பட இயக்குனர்?
ADDED : 729 days ago
நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவின் 90ஸ் ரசிகர்களுக்கு மிக பிரபலமானவர். தற்போது தனுஷின் 51வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது அல்லாமல் தற்போது தனது 99வது படமான நா சாமி ரங்கா எனும் படத்தில் நடித்து வருகிறார் நாகார்ஜூனா.
இந்த நிலையில் தனது 100வது படத்திற்கான கதை கேட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தமிழில் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன், நாகார்ஜூனாவை சந்தித்து கதை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இதற்கான இறுதிகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது .