உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவிக்கு வில்லனாகும் ராணா

சிரஞ்சீவிக்கு வில்லனாகும் ராணா

மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் சிரஞ்சீவி தனது 156வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தைத் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் . எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தற்போது இதன் ப்ரீ புரொடக்சன்ஸ் பணி நடைபெற்று வருகிறது. பேண்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்திற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ராணா டகுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இவரை வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கும் முயற்சிகளில் படக்குழுவினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !