டிசம்பரில் ‛லால் சலாம்' படத்தின் ஆடியோ ரிலீஸ்
ADDED : 706 days ago
தனுஷ் நடித்த 3, கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜாவை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. அதையடுத்து தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற ஒரு கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, திருவண்ணாமலை உள்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. லால் சலாம் படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.