‛சிவாஜி' பட மறு வெளியீடு தள்ளிவைப்பு
ADDED : 673 days ago
சமீபத்தில் ரஜினியின் பாபா படம் மீண்டும் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி கமலின் ஆளவந்தான் படத்தோடு ரஜினியின் முத்து படமும் வெளியானது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளான நேற்று அவர் நடித்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‛சிவாஜி - தி பாஸ்' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிடுவதற்கு அப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் சிவாஜி படத்தை வெளியிடவில்லை என்று அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. மேலும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனிடையே டிச., 31ல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.