விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளர் திடீர் மாற்றம்
ADDED : 725 days ago
அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அவருடன் திரிஷா, ரெஜினா, பிரியா பவனி சங்கர், ஆரவ், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் வரை நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் எதற்காக நீரவ்ஷா மாற்றப்பட்டு, ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தில் இணைந்திருக்கிறார் என்பது குறித்த காரணங்கள் வெளியாகவில்லை.