மீண்டும் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்
ADDED : 618 days ago
நடிகர் தனுஷ் ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்திருந்தார். தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் மொழியில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து தனுஷ் மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விராட்டா பரவம் பட இயக்குனர் உதுகுலா வேணு இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனை பீபுல் மீடியா பேக்டரி தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.