கருடன் படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்
ADDED : 663 days ago
துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிதாக சூரி 'கருடன்' என்கிற முழு நீள ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். வெற்றி மாறன் கதையில் உருவாகும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கும்பகோணம், தேனி போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது.
இந்த நிலையில் தற்போது கருடன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக சூரி சிங்கள் டேக்கில் நீளமான எமொஷனல் வசனம் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இப்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.