கவுஹாத்தி காமாக்ய தேவியை தரிசனம் செய்த தமன்னா!
ADDED : 662 days ago
ஜெயிலர் படத்தை அடுத்து சுந்தர்.சி.,யின் அரண்மனை-4 படத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா இந்த ஆண்டில் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக அவ்வப்போது ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் தமன்னா தற்போது கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று குடும்பத்தோடு வழிபாடு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள தமன்னா, எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள் என்று பதிவிட்டுள்ளார்.