பரதநாட்டியம் ஆடி தெறிக்கவிட்ட ப்ரீத்தி சஞ்சீவ்!
ADDED : 585 days ago
பிரபல சின்னத்திரை நடிகை ப்ரீத்தி, நடிகர் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு பொறுப்பான குடும்ப பெண்ணாக இருந்து வருகிறார். இடையில் சிறிது காலம் நடிக்க வராமல் இருந்த அவர் தற்போது சீரியல்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். நடனத்தில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள ப்ரீத்தி தனது நடன திறமையையும் அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார். அதற்கேற்றார் போல் தற்போது இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங் பாடலுக்கு பரதநாட்டியம் ஸ்டைலில் அனல் பறக்க நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நேயர்கள் இந்த வயதிலும் இப்படி நடனமாடுகிறாரே என ப்ரீத்தியின் நடனத்திறமையை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.