உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல்

மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல்

நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‛தக் லைப்' படத்தில் நடிக்கிறார். டில்லியில் நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் அவருடன் சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, கவுதம் கார்த்திக் ஆகியோரும் இந்த படத்தில் உள்ளார்கள்.

படப்பிடிப்பு இடைவெளியின் போது வெளியிடங்களுக்கு சென்று வருகிறார் கமல். சில தினங்களுக்கு முன் நூலகம் சென்ற போட்டோவை தனது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டு இருந்தார் கமல். இப்போது ஒரு மேஜையை வியப்புடன் பார்க்கும் ஒரு போட்டை வெளியிட்டு, ‛‛மேஜையை கண்டு பொறாமைப்படுவேன் என ஒரு போதும் நினைக்கவில்லை. இந்த மேஜையை உருவாக்கிய கலைஞருக்கு சல்யூட்'' என பதிவிட்டுள்ளார் கமல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !