சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா
ADDED : 514 days ago
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் ரெயின்போ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த குட்பை என்ற படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதையடுத்து மிஷன் மஜ்னு, அனிமல் போன்ற படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் சல்மான்கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்திலும் நடிக்க ராஷ்மிகா கமிட்டாகியுள்ளார். இந்த தகவல் வெளியானதை அடுத்து 28 வயதாகும் ராஷ்மிகா தன்னைவிட 30 வயது அதிகமான சல்மான்கானுக்கு ஜோடியாக நடிப்பதா? என்று அவரது ரசிகர்கள் தங்களது அதிர்ச்சி மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.