பிறந்தநாள் பரிசாக சரத்குமார் பட டீசரை வெளியிட்ட மேஜர் ரவி
ADDED : 530 days ago
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து தொடர்ந்து ராணுவ பின்னணி கொண்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர் இயக்குனர் மேஜர் ரவி. ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்ற பின்னர் இயக்குனராக மாறிய இவர் சமீபகாலமாக பிசியான நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பியுள்ள மேஜர் ரவி ஆபரேஷன் ராஹத் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக சரத்குமார் நடிக்கிறார். இந்த படமும் ராணுவ பின்னணியில் தான் உருவாகி வருகிறது நேற்று சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்தநாள் பரிசாக இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் மேஜர் ரவி. இந்த படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் ஹிந்தி என ஒரு பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது.