உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேறு ஒருவர் டைரக்சனில் நடிகராக மாறிய அல்போன்ஸ் புத்ரன்

வேறு ஒருவர் டைரக்சனில் நடிகராக மாறிய அல்போன்ஸ் புத்ரன்

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நேரம், பிரேமம் என மலையாளத்தில் இரண்டு ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழிலும் சேர்த்து பெரிய அளவில் பேசப்பட்டவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட டைரக்ஷனுக்கு ஏழு வருடம் இடைவெளி விட்டுவிட்டார் அல்போன்ஸ் புத்திரன். அதன்பிறகு அவர் பிரித்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கிய கோல்ட் திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில் தமிழில் சாண்டி மாஸ்டர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அல்போன்ஸ் புத்ரன். இதுதவிர பரபரப்பான கருத்துக்களை கூறி சோசியல் மீடியாவின் கவனத்தை ஈர்த்து அவ்வப்போது தனது இருப்பை வெளிக்காட்டி வரும் இவர் அஜித், ரஜினியை வைத்து படம் இயக்கப் போவதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அல்போன்ஸ் புத்ரன் ஒரு நடிகராக மாறி முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் கெஸ்ட் ரோலில்இந்த கதையை எழுதும்போதே அந்த கதாபாத்திரத்தில் அல்போன்ஸ் புத்திரன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று, தான் நினைத்ததாகவும் அதனால்தான் இவ்வளவு தூரம் முயற்சி செய்து அவரை இந்த படத்தில் நடிக்க அழைத்ததாகவும் கூறியுள்ளார் இயக்குனர் அருண் வைகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !