வெப் தொடரில் விஜய் சேதுபதி, மணிகண்டன்
ADDED : 428 days ago
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் வெளிவந்த 'மகாராஜா' படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து தனது புதிய படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். தற்போது புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதி உடன் குட் நைட் புகழ் மணிகண்டனும் இணைந்து நடிக்கிறார். இதற்கு 'முத்து என்கிற காட்டான்' எனும் தலைப்பு வைத்துள்ளனர். இது கிராமத்து பின்னனியில் உருவாகும் ஆக் ஷன் கதை தொடராக உருவாக உள்ளது.