ராயன் பட பாடலை ரீ-கிரியேட் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள்
ADDED : 426 days ago
சினிமாவில் ஹிட்டாகும் பாடலை ரீ-கிரியேட் செய்து ரீல்ஸ் வெளியிட்டு சோஷியல் மீடியா பிரபலங்கள் புகழ் தேடி கொள்கின்றனர். அந்த வகையில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் வாட்டர் பாக்கெட் பாடலானது சூப்பர் ஹிட்டாகியுள்ளது. சந்தீப் மற்றும் அபர்ணாவின் நடனம் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அந்த பாடலை சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அப்படியே ரீ-கிரியேட் செய்து வருகின்றனர். ஸ்ரீநிதி, ரிஷா ஜேக்கப், சம்யுக்தா, ரவீணா உள்ளிட்டோர் வாட்டர் பாக்கெட் பாடலுக்கு நடனமாடி அதை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.