இந்திரா தொடர் நடிகைக்கு நிச்சயதார்த்தம்
ADDED : 414 days ago
ஜீ தமிழில் அக்ஷய் கமல், பெளஸி நடிப்பில் ஹிட் அடித்த தொடர் இந்திரா. 536 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த தொடர் அண்மையில் முடிவுற்றது. இந்த தொடரில் மேனகா ப்ரியா என்ற நடிகையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு தற்போது விஷ்ணு விக்னேஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மேனகாவுக்கு சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.