உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போர் வீராங்கனையாக நடிக்கும் சம்யுக்தா

போர் வீராங்கனையாக நடிக்கும் சம்யுக்தா


பிக்சல் ஸ்டுடியோ சார்பில் புவனும், ஸ்ரீ ஹரும் தயாரித்துள்ள படம் 'ஸ்வயம்பு'. இதில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருக்கிறார் சம்யுக்தா. அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் 'ஸ்வயம்பு' படத்தில் இருந்து அவரது கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் சம்யுக்தா போர் வீராங்கனையாக நடித்துள்ளார்.

சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் ஆகியோர் நிகிலுக்கு ஜோடியாக கதாநாயகிகளாக நடித்துள்ளனர். போர் பின்னணியில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் முதல்தர தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ளது.

பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கியுள்ள இப்படத்திற்கு 'கேஜிஎப்' மற்றும் 'சலார்' படப்புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, கே.கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !