சாரி: சேலையை மையமாக கொண்ட சைக்காலஜிக்கல் திரில்லர் படம்
ADDED : 356 days ago
ஆர்ஜிவி டென் என்ற நிறுவனம் சார்பில் ரவி வர்மா தயாரிக்கும் படம் 'சாரி'. இதில் கதாநாயகனாக சத்யா யாது நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஆராத்யா தேவி நடித்துள்ளார். முன்பு ஸ்ரீலக்ஷ்மி என்று அழைக்கப்பட்ட ஆராத்யா தேவி கேரளாவைச் சேர்ந்தவர். சபரி ஒளிப்பதிவு செய்கிறார். கிரி கிருஷ்ணா கமல் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் திரில்லராக படம் உருவாகி உள்ளது. சேலை அணிந்த ஒரு பெண்ணின் மீது தீரா அன்பு வைத்திருக்கும் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை தருகிறான். ஒருக்கட்டத்தில் அதுவே ஆபத்தாக மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை. இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் நவம்பர் மாதம் வெளியாகிறது” என்றார்.