உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது

'லவ் அண்ட் வார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு: 2 வருடங்களுக்கு பிறகு வெளிவருகிறது


பாலிவுட்டில் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் லவ் அண்ட் வார். ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல், கத்ரினா கைப் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகும் படம். பாஜிரோ மஸ்தானி, பிளாக், பத்மாவதி, கங்குபாய் கத்திவாடி உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இயக்கியர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக 'ஹீரா மண்டி' என்ற பரபரப்பான வெப் தொடரை இயக்கினார்.

கடந்த ஜனவரி மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2026ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி அன்று வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தனது கனவு படம் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளார். பன்சாலி புரொடக்ஷன் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். பட்ஜெட் 300 கோடி என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !