என்னை சீரியலை விட்டு தூக்க காரணம் இதுதான் - அர்த்திகா
ADDED : 338 days ago
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட்டான சீரியல் கார்த்திகை தீபம். இதில் கார்த்திக், அர்த்திகா, மீரா கிருஷ்ணா உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்து வந்தனர். மக்கள் மத்தியில் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், திடீரென சீரியலில் ஹீரோயின் இறப்பது போல் காண்பித்து சீசன் 1ஐ முடித்துவிட்டனர். அதேசமயம் தொடர்ச்சியாக சீசன் 2 புதிய கதைக்களத்துடன் ஒளிபரப்பாக ஆயத்தமாகிவிட்டது. இந்நிலையில் சீசன் 1 ஹீரோயின் அர்த்திகா தனக்கு திருமணமாகிவிட்டதால் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியவில்லை. இதை காரணமாக வைத்து தான் என்னை திட்டம் போட்டு சீரியல் குழுவினர் வெளியேற்றி விட்டார்கள் என அண்மையில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.