மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
151 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
151 days ago
சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அதிகமாக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதற்கு பதிலடி தரும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் சீனா ஆரம்பித்துள்ளது. அதில் ஒரு பகுதியாக அமெரிக்காவில் தயாராகி வரும் ஹாலிவுட் படங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.
வருடத்திற்கு 10 படங்கள் வரையில் சீனாவில் ஹாலிவுட் படங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதை மேலும் குறைக்க முடிவு செய்துள்ளார்கள். இருந்தாலும் கடந்த சில வருடங்களில் ஹாலிவுட் படங்களின் வசூல் சீனாவில் குறைந்துவிட்டதால் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது என்கிறார்கள்.
ஹாலிவுட் படங்களின் ஒட்டு மொத்த உலக வசூலில் சீனாவிலிருந்து 5 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது என்று தகவல். சமீபத்தில் வெளியான 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' படம் உலக அளவில் 413 மில்லியன் வசூலைப் பெற்றது. சீனாவிலிருந்து கிடைத்த வசூல் 14.4 மில்லியன் யுஎஸ் டாலர் தானாம்.
'டைட்டானிக், அவதார்' போன்ற படங்கள் பெற்ற வசூல் சாதனையை தற்போதைய ஹாலிவுட் படங்கள் சீனாவில் புரிவதில்லை. 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் மட்டும் சீனாவில் 579 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துக் கொடுத்ததாம். அதுதான் மிகப் பெரிய வசூல் என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
உலக அளவில் சீனாவில் உள்ள சினிமா வியாபாரம் மிகப் பெரியது. அந்நாட்டில் மட்டும் 2024ம் ஆண்டின் கணக்குபடி 90 ஆயிரம் தியேட்டர்கள் உள்ளன. ஒரு லட்சம் தியேட்டர்களை நெருங்க திட்டமிட்டுள்ளார்கள்.
151 days ago
151 days ago