25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் - ஷாலினி!
ADDED : 206 days ago
சரண் இயக்கிய 'அமர்க்களம்' என்ற படத்தில் அஜித்குமார், ஷாலினி இணைந்து நடித்தார்கள். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி கடந்த 2000ம் ஆண்டில் ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். நேற்றோடு அஜித் - ஷாலினி தம்பதிக்கு திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதன் காரணமாக கார் ரேஸ் போட்டியில் இருந்த அஜித்குமார் நேற்று சென்னை திரும்பியவர், 25வது திருமண நாளை மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அது குறித்த வீடியோ ஒன்றை தனது இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் ஷாலினி. இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். அதோடு இந்த வீடியோவில் வழக்கத்தை விட இளமையாக காணப்படுகிறார் அஜித்குமார்.