உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் நானி!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் நானி!


தற்போது சூர்யா நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கியுள்ள 'ரெட்ரோ' படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதே நாளில் சசிகுமார், சிம்ரனின் 'டூரிஸ்ட் பேமிலி' மற்றும் தெலுங்கு நடிகர் நானி நடித்த 'ஹிட்- 3' ஆகிய படங்களும் திரைக்கு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஹிட்-3 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நானி அளித்துள்ள பேட்டியில், ''கார்த்திக் சுப்பராஜ் அருமையான இயக்குனர். அவர் இயக்கும் படங்களை நான் விரும்பி பார்ப்பேன். அவர் என்னிடத்தில் சில கதைகளை சொல்லி இருக்கிறார். அதனால் அவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ரெட்ரோ படத்திற்கு பிறகு நானி நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவது தெரிய வந்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !