மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
152 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
152 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
152 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
152 days ago
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பரவலாக இசை அமைத்து வரும் அனிருத், தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். மே 30ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது இணைய பக்கத்தில் அனிருத்துக்கு ஒரு சிறிய காதல் கடிதம் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛இந்த கிங்டம் படத்திற்காக ஒரு காதல் பாடலை உருவாக்கினோம். என்னுடைய மூன்றாவது படம் வெளியானதில் இருந்தே நான் அனிருத்தின் ரசிகராக இருக்கிறேன். என்னுடைய படத்திற்கு அவர் ஒருநாள் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளேன். அது 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் நிறைவேறி உள்ளது. என்னுடைய 13வது படத்திற்கு அனிருத் இசையமைத்த முதல் பாடல் வெளியாகி இருப்பது சந்தோஷமாக உள்ளது. எங்களது உலகத்தையும் உணர்வுகளையும் உங்களுக்கு திறந்து விடுகிறோம். மகிழ்ச்சி மற்றும் நினைவுகளையும் சேர்க்கும் என்று நம்புகிறேன்'' என்று விஜய் தேவர கொண்டா இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
152 days ago
152 days ago
152 days ago
152 days ago