கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம்
ADDED : 139 days ago
ரஜினி நடிப்பில் திரைக்கு வந்துள்ள கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்திருந்த போதும் அவரது புகைப்படங்களும் விளம்பரங்களில் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த கூலி படத்தின் ஹிந்தி பதிப்பை பார்த்துவிட்டு அமீர் கானின் ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளார்கள். இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகருக்கு இத்தனை சிறிய வேடம் கொடுத்துள்ளார்கள். கூலி படத்தில் அவர் இறுதியில் மட்டுமே தோன்றுகிறார். கதைக்கும் அவரது கதாபாத்திரத்திற்கும் எந்த முக்கியத்துவம் இல்லை. ஒரு மிகப்பெரிய நடிகரை வீணடித்து விட்டார் என்று அமீர்கான் ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். மேலும் அமீர்கான் இதுபோன்று சிறப்பு தோற்றங்களில் நடிக்க கூடாது என்றும் அவரது ரசிகர்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.