உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல்

பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல்

மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத், ரித்தி குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தி ராஜா சாப். ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் மாதம் இறுதியில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து இறுதிக்கட்ட பணிகளை தொடங்குகிறார்கள். 2026ம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி சங்கராந்திக்கு படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை பிரபாஸின் பிறந்தநாளான அக்டோபர் 23ம் தேதி வெளியிட்ட படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !