உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள்

'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள்


சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இந்த படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதுவரை இந்த படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பை விஷால் புது உதவி இயக்குநர் குழுவை வைத்து இயக்கினார். ரவி அரசு மற்றும் அவரின் உதவி இயக்குநர்கள் எவரும் படப்பிடிப்பு தளத்தில் இல்லை என்கிற தகவல்கள் தீயாக பரவியது.

அதன் பின்னர் ரவி அரசு உடன் விஷால் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக இந்த பிரச்னையை தீர்த்து வைத்துள்ளார். இப்போது மீண்டும் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. மீண்டும் இந்த படத்தை விட்டு ரவி அரசு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை விஷால் இயக்கி வருகிறாராம். ஆனால், சில காட்சிகளை மட்டும் தான் விஷால் இயக்கியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இயக்குனராக விஷால் படப்பிடிப்பு தளத்தில் உள்ள வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !