உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்'

மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்'

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் மனிஷா ஜஸ்னானி. 'இருக்கு ஆனா இல்ல, வீர சிவாஜி, போங்கு' உள்ளிட்ட சில படங்களிலும், சில வெப் தொடர்களிலும் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடைசியாக 'ரெட்பிளவர்' என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்த நிலையில் அவர் தற்போது நடித்து வரும் படம் 'மெஸன்ஜர்'. பி.வி.கே பிலிம் பேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரிக்கும் படம். இதில் ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் கன்னி மாடம், யுத்த காண்டம் பாத்திரகாட் (மலையாளம்) போன்ற படங்களில் நடித்தவர். இவர்கள் தவிர பாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். ரமேஷ் இலங்காமணி இயக்கி உள்ளார். பால கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், அபுபக்கர் இசை அமைத்துள்ளார்.

பேஸ்புக்கில் ‛மெஸன்ஜர்' மூலம் பழகிய ஒரு பெண் விபத்தில் இறந்துபோக அதே நினைவில் வாழும் ஹீரோவை மீண்டும் அதே 'மெஸன்ஜர்' மூலம் இறந்துபோன அந்த பெண் பேசுவது மாதிரியான சஸ்பென்ஸ், திரில்லர் கதை. படம் வருகிற 31ம் தேதி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !