ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா
சில சின்னத்திரை தொடர்களிலும், விளம்பர படங்களிலும் நடித்தவர் ஹர்ஷா. 'அரண்மனை 4' படத்தில் நடித்து கலக்கினார். ஒரு பெரிய மீனை உயிருடன் அவர் கடித்து நடித்த காட்சி வைரல் ஆனது. தற்போது ஹர்ஷா 'ரூம் பாய்' என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்கும் இந்த படத்தில், சி.நிகில் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவரது ஜோடியாக ஹர்ஷா நடிக்கிறார்.
இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், யூடியூப் காத்து கருப்பு, சாதனா, இன்ஸ்டா கற்பகம், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், கீர்த்தி நடித்துள்ளனர். சி.பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்ய, வேலன் சகாதேவன் இசை அமைத்துள்ளார்.
ஜெகன் ராயன் இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறியதாவது: பேமிலி சென்டிமெண்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக படம் உருவாகி உள்ளது. ஏலகிரி, திருப்பத்தூர், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது. என்றார்.