உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா'

ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா'

டொமினிக் அருண் இயக்கத்தில், கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி மற்றும் பலர் நடிப்பில் மலையாளத்தில் ஆகஸ்ட் மாதக் கடைசியில் வெளிவந்த படம் 'லோகா சாப்டர் 1 சந்திரா'.

சுமார் 30 கோடியில் தயாரான இந்தப் படம் எதிர்பாராத விதமாக சூப்பர் பம்பர் ஹிட் ஆனது. பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிகமாக 300 கோடி வசூலித்தது. மலையாளத் திரையுலகத்தில் இத்தனை வருட வரலாற்றில் 300 கோடி வசூலைக் கடந்த முதல் படம் என்ற சாதனையைப் புரிந்தது.

படம் தியேட்டர்களில் நன்றாக ஓடி வந்ததால் வழக்கம் போல நான்கு வாரங்களுக்குப் பிறகு படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடவில்லை. ஹிந்தியில் உள்ள நடைமுறை போல எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள்.

அடுத்த வாரம் அக்டோபர் 31ம் தேதி இப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !