உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

புதுமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ள படம் 'மாஸ்க்'. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் ருஹானி ஷர்மா, பால சரவணன், சார்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் இப்படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 21ம் தேதியன்று இப்படம் திரைக்கு வருகிறது என படக்குழு அறிவித்துள்ளனர். கவின் நடித்த ஸ்டார், டாடா படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அதன்பின் அவர் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர், கிஸ் ஆகிய படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதன்காரணமாக மாஸ்க் படத்தை பெரிது நம்புகிறார் கவின். 'மாஸ்க்' படம் கவினை வெற்றி பாதைக்கு மீண்டும் கொண்டு வருமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !