உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன்

ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன்

2015ல் வெளிவந்த 'பிரேமம்' மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். அதன்பின் தமிழில் 'கொடி, தள்ளிப் போகாதே, சைரன்,' ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் கொடி தவிர்த்து மற்ற படங்கள் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என சில வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும் தமிழில் அவருக்கு வெற்றி என்பது கிடைக்காமலேயே இருந்தது.

அதை இந்த வருடத் துவக்கத்தில் வெளிவந்த 'டிராகன்' படம் மாற்றியது. அப்படத்தில் கல்லூரியில் படிக்கும் பிரதீப் ரங்கநாதனின் காதலியாக நடித்திருந்தார். அதற்கடுத்து துருவ் விக்ரம் ஜோடியாக அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'பைசன்' படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் வெற்றியே கிடைக்காமல் இருந்தவருக்கு ஒரே ஆண்டில் இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டில் தமிழில் இரண்டு படங்கள், மலையாளத்தில் இரண்டு படங்கள், தெலுங்கில் இரண்டு படங்கள் என மொத்தம் 6 படங்கள் அவர் நடித்து வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !