உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா

பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா

அனிமல் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' எனும் படத்தை இயக்குகிறார். போலீஸ் கதையில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது. நேற்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பட அறிவிப்பு தொடர்பாக ஒரு அறிமுக வீடியோவை வெளியிட்டனர். அதில் முக்கிய வேடத்தில் நடிப்பவர்களின் பட்டியலும் இடம் பெற்றது.

அதன்படி இந்த படத்தின் நாயகியாக த்ரிப்தி டிம்ரி நடிக்கிறார். வில்லனாக விவேக் ஓபராய் நடிக்க, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். இவர்களுடன் பழம்பெரும் நடிகை காஞ்சனாவும் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த காஞ்சனா ஒருக்கட்டத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகினார். இருப்பினும் கடந்த 2017ல் இதே சந்தீப் ரெட்டி இயக்கிய அர்ஜூன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா பாட்டியாக காஞ்சனா நடித்திருந்தார். அதன்பின் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் சந்தீப் இயக்கத்தில் ஸ்பிரிட் படத்தில் இணைந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !