உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி

எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி

70 வயதை கடந்தும் இப்போதும் மலையாள திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் உடல் நலக்குறைவு மற்றும் சிகிச்சை காரணமாக கடந்த ஏழு எட்டு மாதங்களாக படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளவில்லை. அது மட்டுமல்ல அவர் இந்த எட்டு மாதங்களாக சென்னையில் உள்ள தனது வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

சமீபத்தில் தான் அவர் ஏற்கனவே நடித்து வந்த பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்புக்காக முதலில் விசாகப்பட்டினமும், அதனை தொடர்ந்து லண்டனில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நேற்று நேரடியாக கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார் மம்முட்டி. 8 மாதம் கழித்து கேரளாவிற்கு மீண்டும் திரும்பி உள்ள மம்முட்டிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மற்றும் அவரது நண்பர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !