ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா
ADDED : 14 hours ago
'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் படத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பின்னர் கென்யா ஆகிய இடங்களில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்புக்கு சிறிய இடைவெளி விட்டிருக்கிறார்கள்.
இந்த மாதம் படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள். அதன்படி நவம்பர் 15ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி அதில் தலைப்பையும், அதற்கான வீடியோவையும் வெளியிட உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அந்த நிகழ்வை ஓடிடி தளம் ஒன்றில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளார்களாம். ஒரு திரைப்பட விழா ஓடிடி தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.