உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு

பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு


தெலுங்கில் நாக சைதன்யா நடிப்பில் அவரது 24வது படமாக உருவாகி வரும் படத்தை கார்த்திக் தண்டு என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடக்கிறார். இவரது கதாபாத்திர போஸ்டரை இன்று 10 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் இன்று அதிகாலையில் ஹைதராபாத்துக்கும் பீஜப்பூருக்கும் இடையில் நெடுஞ்சாலையில் நடந்த பேருந்து விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிகழ்வு தெலுங்கானாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இறந்தவர்களுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ள நாக சைதன்யா படக்குழுவினர் தங்களது இந்த போஸ்டர் வெளியீட்டை நாளை செவ்வாய் கிழமை வெளியிடும் விதமாக தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 6.30 மணி அளவில் தண்டூரிலிருந்து ஹைதராபாத்திற்கு சென்று கொண்டிருந்த தெலுங்கானா அரசு பேருந்து ஹைதராபாத்துக்கு 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செவ்வல மண்டல் என்கிற பகுதியில் வந்தபோது எதிரில் கான்கிரீட் தூண்கள் ஏற்றி வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !