உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேஜர் ரவியின் புதிய படம் 'பஹல்காம்' பூஜையுடன் அறிவிப்பு ; மோகன்லால் நடிக்கிறாரா?

மேஜர் ரவியின் புதிய படம் 'பஹல்காம்' பூஜையுடன் அறிவிப்பு ; மோகன்லால் நடிக்கிறாரா?


மலையாள திரையுலகில் 'கீர்த்தி சக்ரா, குருசேத்திரா, பிக்கெட் 43' உள்ளிட்ட ராணுவ பின்னணி கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் முன்னாள் ராணுவ வீரரும் தற்போதைய திரைப்பட இயக்குனருமான மேஜர் ரவி. குறிப்பாக மோகன்லாலை வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வந்தார். கடந்த ஏழு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த நிலையில் மீண்டும் மோகன்லாலை வைத்து ராணுவப் பின்னணியில் ஒரு படத்தை இயக்க உள்ளார் என்று கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் தான் இயக்க உள்ள புதிய படத்திற்கு பஹல்காம் என டைட்டில் வைத்து இந்த படத்திற்கு துவக்க விழா பூஜையையும் நடத்தியுள்ளார் மேஜர் ரவி. இந்த படத்தை நடிகர் அனூப் மேனனுடன் இணைந்து மேஜர் ரவியே தயாரிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலையும் அதற்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியையும் மையப்படுத்தி இந்த படம் உருவாக இருக்கிறது என்பதை டைட்டிலை பார்க்கும்போதே தெரிகிறது.

அதே சமயம் ஏற்கனவே வெளியான தகவலின்படி இந்த படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லாமல் தான் இந்த பூஜை நடந்து முடிந்துள்ளது. வரும் நாட்களில் இந்த படத்தில் நடிப்பதை மோகன்லாலோ அல்லது மேஜர் ரவியோ உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !