நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன்
ADDED : 27 minutes ago
தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவரது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்துள்ளார். பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் மாடல் ரக காரான இதன் மதிப்பு ரூ.10 கோடி என்று கூறப்படுகிறது.
அந்த காருடன் நயன்தாரா, இரு மகனுடன் இருக்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், ‛‛இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிர் நயன்தாரா. நீ பிறந்த தினம் வரம்'' என மனைவியை வாழ்த்தி உள்ளார் விக்னேஷ் சிவன்.
இதேபோல் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா சிறப்பு பரிசளிப்பதும் வெளிநாட்டு டூர் அழைத்து செல்வதையும் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக வைத்துள்ளார்.